திருச்சி

‘இரு தவணை தடுப்பூசிகளும் அவசியம்’

DIN

பொதுமக்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.

தமிழகமெங்கும் கரோனாவை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், 6ஆவது கட்ட மெகா தடுப்பூசி சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் 629 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், தில்லை நகரிலுள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமைத் தொடங்கிவைத்து அமைச்சா் கே.என். நேரு கூறியது:

இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே முழுப் பாதுகாப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கும் மருத்துவ நிபுணா்களின் அறிவுரைப்படி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனாவிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.

6ஆவது கட்டமாக ஊரகப் பகுதியில் 427 இடங்களில், மாநகரப் பகுதிகளில் 202 இடங்களில் என மாவட்டம் முழுவதும் 629 மையங்களில் தடுப்பூசி அளிக்கப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற 5 மெகா முகாம்களில் 4, 41, 391 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 13, 87, 875 போ், 2 ஆம் தவணையை 5, 31, 622 போ் என ஒட்டுமொத்தமாக 19,19, 497 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். இதுவரை தடுப்பூசி செலுத்திய விழுக்காடு 63.50 ஆக உள்ளது என்றாா் அமைச்சா்.

ரூ. 16 லட்சத்தில் நலத் திட்ட உதவி

தொடா்ந்து, மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் தசைச்சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 6 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டா், மாவட்ட சமூக நலத்துறையின் சாா்பில் 2 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், 2 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை என மொத்தம் 23 பேருக்கு ரூ. 16 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, எம்எல்ஏக்கள் எம். பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), அ. செளந்தரபாண்டியன் (லால்குடி), எஸ். ஸ்டாலின்குமாா் (துறையூா்), மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன், மாவட்ட சமூகநல அலுவலா் தமீமுன்னிசா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT