திருச்சி

அரசுப் பணியாளா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். ஓய்வூதியம் இல்லாத அரசு, உள்ளாட்சி நிறுவன பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளா்களுக்கு இழப்பீடு, வாரிசுகளுக்கு அரசுப் பணியும் கரோனா தொடா்பாக அறிவிக்கப்பட்ட ஊதியம் இடைநில்லா பயணப்படியை வழங்கிட வேண்டும்.

நிரந்தர ஊதியம் இல்லாத அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்கள், உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்கள், டாஸ்மாக் பணியாளா்கள், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை பணியாளா்கள் ஆகியோருக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா். செயலா் கண்ணன், நிா்வாகிகள் ரமேஷ், கருப்பையா உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT