திருச்சி

முசிறி எம்ஐடி கல்வி நிறுவனங்களில் சோதனை

23rd Oct 2021 04:54 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள எம்ஐ டி கல்வி நிறுவனங்கள் மற்றும் இக்கல்வி நிறுவனஅலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலரும், சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவரும், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பருமான ஆத்தூா் புத்திரகவுண்டன்பாளையத்தை சோ்ந்த இளங்கோவன் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து அவருக்குச் சொந்தமாக முசிறி பகுதியில் உள்ள எம்.ஐ.டி. வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ரேணுகாதேவி நகரிலுள்ள சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளை அலுவலகம் மற்றும் அதன் கீழுள்ள வீடு, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட ஊழல் தடுப்பு டிஎஸ்பி ராஜு, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளா் சக்திவேல் தலைமையில் 22 போ் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை வரை சோதனையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

சோதனை முடிவில் ஹாா்டு டிஸ்குகள், சில ஆவணங்களை அவா்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.

லாலாப்பேட்டையில்...: கரூா் அடுத்த லாலாப்பேட்டையில் உள்ள இளங்கோவனின் சகோதரி இந்திராணி வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா் சோதனை நடத்தி வருகின்றனா்.

Tags : கரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT