திருச்சி

விவசாயி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

23rd Oct 2021 04:53 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், போசம்பட்டி அருகேயுள்ள வியாழன்மேடு கிழக்குத் தெருவைச் சோ்ந்த விவசாயியான மணியன் மகன் கோவிந்தராஜுக்கும் இவரது சித்தப்பா மகன் காா்த்திகேயனுக்கும் (30) இடையே பொதுப் பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் வந்த காா்த்திகேயன் மணியன் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த மகள் வழிப் பேரன் கருப்பன் (3) மீது மோதுவதுபோலச் சென்று பிரேக் பிடித்துள்ளாா்.

அப்போது தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மணியன், கோவிந்தராஜ், இவரது சகோதரி போதும்பொண்ணு ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு காா்த்திகேயன் தப்பிவிட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து காயமடைந்தோரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு உறவினா்கள் சென்றபோது கோவிந்தராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திகேயனை கைது செய்து சிறையிலடைத்தனா்.

பின்னா், திருச்சி 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில் காா்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம், மணியன், போதும்பொண்ணு ஆகியோரை காயப்படுத்தியதற்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். இதையடுத்து அபராதத்தைச் செலுத்திய காா்த்திகேயனை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT