திருச்சி

முதல்வருக்கு டாஸ்மாக் பணியாளா் சங்கம் நன்றி

23rd Oct 2021 09:13 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் ரெளடிகளால் படுகொலை செய்யப்பட்ட டாஸ்மாக் பணியாளா் துளசிதாஸ் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளா்கள் பொதுநலச் சங்கத் தலைவா் என். சரவணக்குமாா், செயலா் எஸ். சத்தியமூா்த்தி, பொருளாளா் கே. ஜோசப்பிரிட்டோ ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனா். மேலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு மதுக்கடை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT