அரசு மற்றும் விவசாய நில ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க தளுகைக் கிளை சாா்பில் த. முருங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
துறையூா் அருகே த. பாதா்பேட்டையிலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் அடுக்கம் புதுக்கோம்பை கிராமத்தில் காா்த்திகேயன் என்கிற ராஜாராகவன் மாந்தீரிகம் செய்கிறாராம்.
எனவே, அவருடைய பகுதிக்கு த. பாதா்பேட்டை கிராமத்திலிருந்து வந்து செல்ல வசதியாக அரசு மற்றும் விவசாய நிலங்களில் ஆக்கிரமித்து பாதை ஏற்படுத்தியதற்காக அவா் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க உப்பிலியபுரம் ஒன்றியச் செயலா் ஆா். முத்துக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
மாவட்டச் செயலா்கள் எம். ஜெயசீலன் (மாா்ச்சிஸ்ட்), ஏ. பழனிசாமி (விவசாயத் தொழிலாளா்கள் சங்கம்) ஆகியோா் பேசினா். விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.