திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் ஊரகப் புத்தாக்கத் திட்டம் என்பது உலக வங்கி நிதியுதவியுடன் மாவட்டத்தில் அந்தநல்லூா், மணப்பாறை, மணிகண்டம், முசிறி மற்றும் துறையூா் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வட்டாரங்களிலுள்ள தொழில்முனைவோா் பயன்பெறும் வகையில் ஓா் இட சேவை வசதி மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தில் நிரப்பப்படவுள்ள தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலா், தொழில் முனைவு நிதி அலுவலா் ஆகிய இரு ஒப்பந்தப் பணியிடங்களுக்கு ஏதேனும் முதுகலை பட்டம் முடித்த மற்றும் கணினி திறன் பெற்றுள்ள 40 வயதுக்குட்பட்ட, ஊரக தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவடிக்கை சாா்ந்த திறன் பெற்றுள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ற்ல்.ா்ழ்ஞ் என்ற இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கி பூா்த்தி செய்து வரும் நவ.15 பிற்பகல் 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ ஆட்சியரகத்தில் அல்லது மாவட்ட செயல் அலுவலா், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், முதல் தளம், பூமாலை வணிக வளாகம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி - 620 001 என்ற முகவரியில் அளிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் இல்லை.