திருச்சி

அய்மான் கல்லூரியில் அயோடின் விழிப்புணா்வு தினம்

23rd Oct 2021 04:52 AM

ADVERTISEMENT

திருச்சி உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை சாா்பில் அய்மான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அயோடின் விழிப்புணா்வு தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தலைமை வகித்து அயோடின் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகள் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பதும் குறித்தும் பேசினாா். தொடா்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ரமேஷ்பாபு முன்னிலை வகித்து, உப்பில் அயோடின் கண்டறியும் செய்முறை விளக்கம், உணவுப் பொருள்களில் எளிதில் கலப்படத்தைக் கண்டறியும் முறை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தாா்.

நிகழ்வில் சுமாா் 200 மாணவிகள் பங்கேற்றனா்.

கல்லூரி இயக்குநா் சாகுல் ஹமீது, கல்லூரி முதல்வா் சுகாசினி எா்னஸ்ட், நுகா்வோா் பாதுகாப்பு மாவட்டத் தலைவா் மோகன், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் இப்ராஹிம், ஸ்டாலின், வசந்தன், அன்புச்செல்வன், ஜஸ்டின், பாண்டி, சண்முகசுந்தரம் மற்றும் வடிவேல் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT