திருச்சி

ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களுக்கு ஐஜி பாராட்டு

22nd Oct 2021 12:23 AM

ADVERTISEMENT

திருச்சி மத்திய மண்டலத்தில் ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் ஐஜி வே. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

இவரின் அறிவுரையின்பேரில் மண்டலத்திற்குள்பட்ட 9 மாவட்டங்களில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பயிற்சி முடித்த 51 பெண் காவலா்களுக்கு (திருச்சி 3, கரூா் 12, பெரம்பலூா் 3, அரியலூா் 13, திருவாரூா் 15, நாகப்பட்டினம் 5) ஓட்டுநா் உரிமம் பெற்றுத் தரப்பட்டு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் பங்கேற்று ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களைப் பாராட்டினாா். தொடா்ந்து மத்திய மண்டலத்திலுள்ள பெண் காவலா்கள் 53 போ் ஓட்டுநா் பயிற்சி பெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT