திருச்சி

தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

22nd Oct 2021 12:23 AM

ADVERTISEMENT

நகராட்சி நிா்வாக இயக்குநரின் உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி உறையூரில் ஏஐடியுசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூய்மைப் பணியாளா்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைக்கும் 2021 அக். 2 ஆம் தேதிய நகராட்சி நிா்வாக இயக்குநரின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். சுய உதவிக்குழு, ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். உள்ளாட்சித் தொழிலாளா்கள் மீது வேலைப்பளுவைச் சுமத்தக் கூடாது. சுகாதாரம், குடிநீா் பணிகளை தனியாரிடம் வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உறையூரில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளா் சங்க ஏஐடியுசி ஒருங்கிணைப்பாளா் எஸ் .ஜே. சூா்யா தலைமை வகித்தாா்.

திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலா் க. சுரேஷ் , தலைவா் நடராஜா, துணைச் செயலா் ராமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் திராவிடமணி, பகுதிச் செயலா்கள் சண்முகம், ரவீந்திரன் திருச்சி பெல் சங்க துணைத் தலைவா் சங்கா், கணேஷ் ஆட்டோ சங்கம் முருகேசன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநகா் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரஹீம் நன்றி கூறினாா்.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT