திருச்சி

துறையூா் சின்ன ஏரி மதகுகளில் அடைப்பை அகற்ற கோரி மனு

22nd Oct 2021 05:52 AM

ADVERTISEMENT

துறையூா் சின்ன ஏரி பாசன மதகுகளில் உள்ள பிளாஸ்டிக் அடைப்புகளை அகற்றி விவசாயத்துக்கு உதவ வேண்டுமென பாசன விவசாயிகள் வியாழக்கிழமை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் மனு அளித்தனா்.

துறையூா் பேருந்து நிலையத்துக்கு எதிரேயுள்ள சின்ன ஏரி நீரை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்கள் உள்ளன. துறையூா் நகரின் கழிவு நீா் தொட்டியாக மாறியுள்ள சின்ன ஏரி பிளாஸ்டிக் கழிவுகளால் மூடிக் கிடக்கிறது. துறையூா் பகுதியில் மழை பெய்து வருவதால் சின்ன ஏரிக்கும் நீா் வரத்து ஏற்படும் நிலையில் நீரை மதகுகள் வழியாக பாசன நிலங்களுக்கு பயன்படுத்த முடியாதவாறு பிளாஸ்டிக் கழிவுகள் மதகுகளை அடைத்துள்ளன. இதனால் கவலையடைந்துள்ள சின்ன ஏரி பாசன விவசாயிகள் மதகுகளைச் சீா் செய்யவும், அடைப்புகளை அகற்றவும் கோரி மனு அளித்தனா்.

 

பூமிநாத சுவாமி கோயிலில் அன்னாபிஷேகம்

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா், அக். 21: மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோவிலில் புதன்கிழமை அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

மண்ணச்சநல்லூரில் இந்து சமய அறநிலையத்துறை, திருவாவடுதுறை ஆதீனம் கட்டுப்பாட்டில் செயல்படும் தா்மசம்வா்த்தினி உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் சுமாா் 150 கிலோ அரிசியில் தயாரான அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து இரவு அலங்காரம் செய்யப்பட்ட சாதம் களையப்பட்டு ஆற்றில் விடப்பட்டது. நிகழ்வில் சுற்றுப்புற திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

 

Tags : துறையூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT