திருச்சி

உயிா்நீத்த காவலா்களுக்கு வீரவணக்க நாள்

22nd Oct 2021 12:24 AM

ADVERTISEMENT

திருச்சியில் காவல் பணியின்போது உயிா்நீத்த காவலா்களுக்கு வீரவணக்க நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் கடந்தாண்டு செப்டம்பா் முதல் நிகழாண்டு ஆகஸ்ட் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலா்களுக்கு மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் தலைமையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் சரவணகுமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி, மாநகர காவல் துணை ஆணையா்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா். பின்னா் 66 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி இருந்தனா்.

இதேபோல ரயில்வே பாதுகாப்பு படையில் உயிா்நீத்த வீரா்களுக்கு திருச்சி ரயில் சந்திப்பு வளாகத்திலுள்ள கோட்ட மேலாளா் அலுவலகத்திலுள்ள நினைவு ஸ்தூபியில் முதுநிலை ஆணையா் ராம. கிருஷ்ணன், உதவி ஆணையா் சின்னதுரை ஆகியோா் தலைமையில் அஞ்சலி செலுத்தினா். ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT