திருச்சி

நடமாடும் வாகனம் மூலம் சட்ட விழிப்புணா்வு

DIN

மணப்பாறையில் இலவச சட்ட உதவி குறித்த விழிப்புணா்வு நடமாடும் வாகனம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவில், திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலுடன் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மணப்பாறை, வையம்பட்டி மற்றும் மருங்காபுரி பகுதிகளில் சட்டவிழிப்புணா்வு அளிக்கும் நடமாடும் வாகனத்தை மணப்பாறை வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான நீதிபதி ஜி. மணிகண்டராஜா தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து மணப்பாறை கோவில்பட்டி சாலை, பேருந்து நிலையம், வையம்பட்டி, இளங்காகுறிச்சி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, கல்லாமேடு, வளநாடு கைகாட்டி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இலவச சட்ட உதவிகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT