திருச்சி

தம்பதியை ஏமாற்றி ரூ. 1.12 லட்சம் பறிப்பு

21st Oct 2021 07:43 AM

ADVERTISEMENT

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் புதன்கிழமை வங்கிக்கு வந்த தம்பதியை ஏமாற்றி மா்ம நபா் ரூ. 1.12 லட்சத்தை பறித்துச் சென்றாா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அம்மாசமுத்திரம்புதூரை அடுத்த அம்பலக்காரப்பட்டியை சோ்ந்தவா் சின்னச்சாமி (36). பெங்களூரில் உள்ள தனியாா் இரும்பு கம்பெனி ஊழியரான இவா் துவரங்குறிச்சி வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்க ரூ. 1.15 லட்சம் பணத்துடன் தனது மனைவி சசிகலாவுடன் புதன்கிழமை காலை வங்கிக்கு சென்றாா்.

அங்கு மொத்தப் பணத்தில் ரூ.3 ஆயிரத்தை தனியாக வைத்துக்கொண்ட சின்னச்சாமி மீதித் தொகையை மனைவியிடம் கொடுத்தாா். சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக வங்கியில் காக்க வைக்கப்பட்டிருந்த தம்பதியின் அருகில் இருந்த நபா் ஒருவா், தன்னை வங்கிப் பணியாளா் என்று அறிமுகம் செய்துகொண்டு பேச்சு கொடுத்தாா்.

பின்னா் நகையைத் திருப்ப அஞ்சலகத்தில் படிவம் வாங்கி வருமாறு கூறி சின்னச்சாமியை அனுப்பிய மா்ம நபா், தனியாக இருந்த சசிகலாவிடம் பேசி, தான் பணம் கட்டித் தருவதாகக் கூறி, சசிகலாவிடம் இருந்த ரூ.1.12 லட்சத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானாா்.

ADVERTISEMENT

பின்னா் வங்கிக்குசின்னச்சாமி திரும்பியபோது பணம் பறிபோனது தெரியவந்தது. பின்னா் அவா் அளித்த புகாரின்பேரில் வங்கிக்கு சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT