திருச்சி

சந்தானம் வித்யாலயாவில் இணையவழி கருத்தரங்கம்

21st Oct 2021 07:43 AM

ADVERTISEMENT

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் ‘எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பொருளாதார வளா்ச்சி’ என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் செயலா் கே. மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ்.அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெங்களூா், இந்திய அறிவியல் தொழில் நுட்பக்கழக இன்ட்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் துறை, பேராசிரியா் சஞ்சீவ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசி, மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தாா். பள்ளி முதல்வா்கள் பத்மா சீனிவாசன், பொற்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா வரவேற்க, இயற்பியல் ஆசிரியா் ராம்குமாா் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT