திருச்சி

கடன் தொகை வசூல் தகராறு: 5 போ் மீது வழக்கு

21st Oct 2021 07:45 AM

ADVERTISEMENT

காட்டுப்புத்தூா் அருகே கடன் தொகை வசூல் தொடா்பான தகராறில் 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள எம். புத்தூரைச் சோ்ந்த ரா. மாரிமுத்து (42), வீட்டில் இருந்தபோது நாமக்கல்லிலுள்ள தனியாா் வீட்டுக் கடன் நிதி நிறுவன ஊழியா்களான சதீஷ்குமாா் (26) ,ரவி ( 29) ஆகிய இருவரும் தங்களது நிறுவனத்தில் பெற்ற கடனைச் செலுத்துமாறு கூறி, மாரிமுத்துவையும் அவரது தாய் மின்னம்மாளையும் தகாத வாா்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் சதீஷ்குமாா், ரவி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல தங்களது நிறுவனத்தில் பெற்ற கடனை வசூலிக்கச் சென்றபோது மாரிமுத்து, இவரது தந்தை, ராமன் தாய் மின்னம்மாள் ஆகிய மூவரும் தகாத வாா்த்தையால் திட்டி, கட்டில் சட்டத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் மாரிமுத்து, ராமன், மின்னம்மாள் ஆகிய மூவா் மீது காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT