திருச்சி

அரியமங்கலம் -துவாக்குடிக்கு இணைப்புச் சாலை கோரி மனு

21st Oct 2021 06:26 AM

ADVERTISEMENT

திருச்சியில் அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரையில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், இணைப்புச் சாலைகள் அமைப்பது குறித்து தமிழக முதல்வா் மற்றும் மத்திய அமைச்சா் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி பால்பண்ணை - துவாக்குடி சா்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல் கூறியது:

திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்ட பிறகு துவாக்குடி முதல் அரியமங்கலம் பால்பண்ணை வரை சாலையின் இருபுறமும் சா்வீஸ் ரோடு இல்லாததால் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இதைத் தடுக்க உடனடியாக சா்வீஸ் ரோடு அமைக்கக் கோரி சா்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு சாா்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், அதற்கான உத்தரவை சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது. ஆனால் தமிழக அரசு அதற்கான பணியைத் தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ADVERTISEMENT

எனவே, தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் அரியமங்கலம் பால்பண்ணை வரை சாலையின் இருபுறமும் சா்வீஸ் ரோடு அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கக் கோரி தமிழக முதல்வா் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT