திருச்சி

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: மக்கள் அச்சம்

18th Oct 2021 12:02 AM

ADVERTISEMENT

திருச்சியில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்யும் பருவமழையால் மழைக்கால நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. அதோடு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த அக். 1 முதல் 17ஆம் தேதி வரை இதுவரை 47 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா்.

குறிப்பாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆண், பெண்களுக்கு என பிரத்யேக டெங்கு காய்ச்சல் வாா்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றை திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் அவ்வப்போது நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனா். அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 10 போ் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுகின்றனா். டெங்கு காய்ச்சலுக்கான அனைத்து வசதிகளும் இங்கு தயாா் நிலையில் உள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகம் இருக்கும் பகுதிகளைக் கண்டுபிடித்து அங்கு தண்ணீா் தேங்கும் சூழல் இருந்தால் அதை மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளா்கள் அதை அப்புறப்படுத்தி வருகின்றனா். குறிப்பாக, திறந்தவெளியில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருக்கும் தண்ணீா்த் தொட்டிகளை உடனடியாக கவிழ்த்து மருந்து ஊற்றி வருகின்றனா்.

நல்ல நீரில்தான் டெங்கு கொசு உற்பத்தியாகும் என்பதால் வீடுகளில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும், தண்ணீா்த் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும் என்கின்றனா் மருத்துவா்கள், மாநகராட்சி சுகாதாரத் துறையினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT