திருச்சி

தொடரும் விவசாயிகளின் நூதன உண்ணாவிரதம்

18th Oct 2021 12:02 AM

ADVERTISEMENT

திருச்சியில் 6 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தில், உண்ண உணவின்றி உயிரிழந்த விவசாயியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வது போன்ற நூதனப் போராட்டம் நடைபெற்றது.

தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவளித்து அந்தப் போராட்டத்தில் பங்கேற்க தங்களுக்கு போலீஸாா் தடை விதித்து வருவதைக் கண்டித்து திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாள்களுக்கு தொடா் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தின் முதல் நாளான கடந்த அக். 12 ஆம் தேதி சட்டையில்லாமல், 2 ஆம் நாளில் கோவணம் அணிந்து, 3 ஆம் நாளில் பிச்சையெடுத்து, 4 ஆம் நாளில் மண்டை ஓடுகளுடன், 5 ஆம் நாளில் நாமம் போட்டு, 6 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை உண்ண உணவின்றி எலிக்கறி உட்கொண்டதால் உயிரிழந்த விவசாயியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வது போன்ற நூதனப் போராட்டமும் நடைபெற்றது.

போராட்டம் தொடரும்: இதுகுறித்து சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு கூறுகையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க போலீஸாா் அனுமதி மறுத்ததால் திருச்சியிலேயே தொடா் போராட்டம் நடத்துகிறோம். தொடா்ந்து 46 நாள்களும் தினசரி ஒரு விதமான போராட்டம் தொடரும். வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்யும் வரையில் போராடுவோம் என்றாா்.

ADVERTISEMENT

மேலும், அரசு கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் தினசரி 5000 மூட்டை நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும். இரு மடங்கு லாபம் தரும் வகையில் வேளாண் பொருள்களுக்கு விலை நிா்ணயிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கிய விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். உ.பி. யில் விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமானோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT