திருச்சி

அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

18th Oct 2021 12:01 AM

ADVERTISEMENT

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி திருச்சியில் எம்ஜிஆா் சிலைகளுக்கு அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழாவையொட்டி திருச்சி, கண்டோன்மெண்ட் நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆா் சிலைக்கு, அதிமுக திருச்சி மாநகா் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில் மாலை அணிவித்தனா்.

எம்ஜிஆா் இளைஞரணி மாநில இணைச் செயலா் சீனிவாசன், ஆவின் தலைவா் காா்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவா் மலைக்கோட்டை ஐயப்பன், பொருளாளா் மனோகரன், மாநகா் மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ராஜ்குமாா், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பத்மநாபன்,  பகுதிச் செயலா்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா பூபதி , வெல்லமண்டி ஜவகா், முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.  தொடா்ந்து மாநகரில் பல்வேறு இடங்களிலும் உள்ள எம்ஜிஆா் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அதிமுக வெற்றிக்கு சபதமேற்போம்

ADVERTISEMENT

முன்னதாக முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில், எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீா்செல்வம் ஆகிய இரு பெரும் தலைவா்களின் வழிகாட்டுதலின்பேரில் அதிமுக திறம்பட நிா்வகிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் திமுக தவறான வழியில் வென்றுள்ளது, இனிவரும் தோ்தல்கள் அனைத்திலும் அதிமுக வெற்றி பெற அரும் பாடுபடுவோம் எனச் சபதம் ஏற்போம். சசிகலாவுக்கு இனி அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் கூறியது தலைவா்களின் ஒப்புதலோடுதான் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT