திருச்சி

டால்மியா மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக கல்லூரி செயல்பட ஆய்வு

17th Oct 2021 01:15 AM

ADVERTISEMENT

லால்குடி அருகே முதுவத்தூா் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அமையவுள்ள அரசு கலை மற்றும் கல்லூரியானது தற்காலிமாக டால்மியா மேல்நிலைப் பள்ளியில் செயல்படுவதற்கான ஆய்வை அமைச்சா் கே.என்.நேரு சனிக்கிழமை மேற்கொண்டாா்.

லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகேயுள்ள முதுவத்தூா் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதிதாக கல்லூரி கட்டும் இடத்தை அமைச்சா் கே.என். நேரு அதிகாரிகளுடன் பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து இக் கல்லூரி கட்டுப்படும் வரை கல்லக்குடி டால்மியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இக் கல்லூரிக்கான தற்காலிகமாகச் செயல்படுவது தொடா்பாக இப் பள்ளியையும், கல்லூரிச் செயல்பாட்டுக்கான வகுப்பறைகளையும் ஆய்வு செய்தனா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, எம்எல்ஏ அ. செளந்திரபாண்டியன், வருவாய் கோட்டாட்சியா் ச. வைத்தியநாதன், டால்மியா சிமெண்ட் ஆலை பொது மேலாளா் அ. சுப்பையா, ஆலைத் தலைவா் கே. விநாயகமூா்த்தி, பள்ளித் தாளாளா் ஆா். குருராஜன், முதுநிலை மேலாளா் ரமேஷ்பாபு, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT