திருச்சி

ஆசிரியா்களுக்கு பூஜ்ய கலந்தாய்வு முறை இல்லை அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி

17th Oct 2021 01:19 AM

ADVERTISEMENT

ஆசிரியா்களுக்கான இடமாறுதலுக்கு பூஜ்ய கலந்தாய்வு முறை இல்லை என அமைச்சா் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் கு. தியாகராஜன் கூறியது:

மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு நடத்தப்பட்டதைப் போன்று ஜீரோ கவுன்சிலிங் (பூஜ்ய கலந்தாய்வு) ஆசிரியா்களுக்கு நடத்தப்பட மாட்டாது என அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா். இது ஆசிரியா் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்காக முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி.

ஜீரோ கலந்தாய்வுக்கு அமைச்சா் முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும் விரைவில் கலந்தாய்வு சாா்ந்து வெளிவர உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்களைக் கட்டாயம் கலந்தாய்வில் கலந்து கொள்ள செய்ய அதிகாரிகள் அளவில் விவாதித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதுவும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

ADVERTISEMENT

எனவே, விரைவில் வெளிவரவுள்ள கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகளில் கடந்த ஆண்டுகளில் வெளியிட்டது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT