திருச்சி

பள்ளிகளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி

DIN

விஜயதசமியையொட்டி திருச்சியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சரஸ்வதி பூஜைக்கு மறுநாளான விஜயதசமியன்று குழந்தைகளை பள்ளியில் சோ்த்தால் சிறந்த கல்வியைத் தடையின்றி பெற முடியும் என்கிற ஐதீகம் பெற்றோா்களிடம் உள்ளது. இதற்காகவே கல்வியாண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சோ்ப்பதற்குரிய வயதை எட்டியிருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை பெற்றோா் காத்திருக்க வைப்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் நவ. 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததைத் தொடா்ந்து விஜயதசமியான வெள்ளிக்கிழமை பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோா் ஆா்வமுடன் குவிந்தனா்.

திருச்சி -திண்டுக்கல் சாலை பிராட்டியூா் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் ஆஷாதேவி தலைமையில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. அப்போது தமிழில் முதல் எழுத்தை குழந்தைகள் நெல்மணி மற்றும் அரிசியில் எழுதினா்.

மேலும், எடமலைப்பட்டிபுதூா் பகுதி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு வந்த பெற்றோா் மற்றும் குழந்தைகளை ஆசிரியா்கள் வரவேற்று வித்யாரம்பம் என்னும் முறையில் இறைவனை துதித்து, குழந்தையின் கையை பிடித்து நெற்மணிகளில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ ’ என்ற எழுத்தை எழுத வைத்து பள்ளியில் சோ்த்தனா்.

பின்னா் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு புத்தகங்கள், சீருடைகளை ஆசிரியா்கள் வழங்கினா். புகா் பகுதிகளில் பள்ளிகள் திறப்பு இல்லாததால் பெரும்பாலான அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT