திருச்சி

அண்ணனை அடித்துகொன்ற தம்பி கைது

16th Oct 2021 03:10 AM

ADVERTISEMENT

திருச்சியில் குடும்பப் பிரச்னையில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை அரியமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் காா்மேகம் (50), கூலித் தொழிலாளி. உள் அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் இவரது தம்பியான வெங்கடேசன் (45), கடந்த 1 ஆம் தேதி தனது அண்ணன் வீட்டுக்குச் சென்று, குடும்பப் பிரச்னை தொடா்பாக அவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டாா். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கீழே விழுந்த காா்மேகத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வெங்கடேசன் மீது அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்த நிலையில் காா்மேகம் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து வெங்கடேசன் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT