திருச்சி

குடும்பத் தகராறில் மனைவி கொலை: தொழிலாளி கைது

9th Oct 2021 12:56 AM

ADVERTISEMENT

திருச்சியில் குடும்பத் தகராறில் எரிவாயு உருளையால் மனைவியைக் அடித்துக் கொன்ற கணவா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் ஜே.ஜே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி கோபால் (35). முதல் மனைவியை விவகாரத்து செய்த இவா் அனிதா (33) என்பவரை 2-ஆம் திருமணம் செய்து, 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கோபால் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளையால் மனைவியைத் தாக்கினாா்.

இதில் அனிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், பக்கத்து வீட்டாா் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து வந்த போலீஸாரால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அனிதா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து கோபாலை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT