திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை

9th Oct 2021 12:55 AM

ADVERTISEMENT

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

பாலக்கரை படையாட்சி தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (47). தச்சுத் தொழிலாளியான இவா் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மனம் உடைந்து வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மற்றொரு சம்பவம்: திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் அன்பழகன் (29). மதுவுக்கு அடிமையான இவா் மது குடிக்க பணம் கேட்டு அவரது குடும்பத்தினா் தராத நிலையில் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவங்கள் குறித்து பாலக்கரை, பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT