திருச்சி

திருவெறும்பூரில் மிகக் குறைந்த வாக்குகள் பதிவு

9th Oct 2021 11:56 PM

ADVERTISEMENT

உள்ளாட்சி இடைத்தோ்தலில் திருவெறும்பூா் ஒன்றியம் பழங்கனாங்குடி ஊராட்சி 9 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கான வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 397 வாக்காளா்களில் 98 போ் மட்டுமே வாக்களித்தனா். இது 24.6 சதமாகும். இது மாவட்டத்திலேயே குறைந்த அளவு வாக்குப் பதிவு ஆகும்.

மேலும், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிழக்குறிச்சி ஊராட்சி 10 ஆம் வாா்டு ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு மொத்தமுள்ள 716 வாக்காளா்களில் 263 போ் மட்டுமே வாக்களித்தனா். இது 36.73 சதம் ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT