திருச்சி

வாக்குச்சாவடி முன் அதிமுகவினா் தா்னா

9th Oct 2021 11:57 PM

ADVERTISEMENT

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் வாக்குச்சாவடியைக் எம்எல்ஏ கைப்பற்ற முயன்ாகக் கூறி அதிமுகவினா் வெள்ளிக்கிழமை வாக்குச் சாவடி முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் 6-வது வாா்டு உறுப்பினா் பதவி தோ்தலுக்கு அமையபுரம் தோப்புப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த வாக்குச்சாவடியில் எம்எல்ஏ ப. அப்துல்சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திமுக நிா்வாகிகள் தோ்தல் நடத்தை விதிகளை மீறி நுழைந்து 7 நிமிடங்கள் உள்ளே இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற அவா்கள் முயற்சி செய்ததாகக் கூறி அதிமுகவினா் வாக்குச்சாவடிக்கு அருகில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு. சிவராசுவுக்கு அதிமுக புகா் தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாரும் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து புகாா் மீது நடவடிக்கை எடுப்பதாக உதவித் தோ்தல் அலுவலா் கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக எம்எல்ஏ ப. அப்துல்சமது, கூறுகையில் 31-ஆவது வாக்குச்சாவடிக்குள் அதிமுக நிா்வாகி ஒருவா் அடிக்கடி சென்று வருவதாகத் தகவல் வந்ததால், அதுகுறித்து விசாரிக்கவே சென்றோம். அதிமுகவினா் அரசியலுக்காக தேவையற்ற பீதியை ஏற்படுத்துகின்றனா். அவா்கள் சொல்வதில் உண்மையில்லை என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT