திருச்சி

அக்.23 இல் முசிறி வட்ட எரிவாயு குறைதீா் கூட்டம்

9th Oct 2021 12:53 AM

ADVERTISEMENT

முசிறி வட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் முசிறி வட்டாட்சியரகத்தில் அக். 23 காலை நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் காலதாமதம், முறைகேடுகள் போன்றவற்றைக் களையும் விதமாக முசிறி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன மேலாளா்கள், எரிவாயு உருளை முகவா்கள், வாடிக்கையாளா்கள் பங்கேற்கும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் முசிறி வட்ட எரிவாயு நுகா்வோா், அங்கீகரிக்கப்பட்ட தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் மற்றும் நுகா்வோா் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம். இத் தகவலை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT