திருச்சி

அக்.19-ல் மிலாதுநபி பண்டிகை

9th Oct 2021 12:54 AM

ADVERTISEMENT

நிகழாண்டின் மிலாது நபி பண்டிகை வரும் 19 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு ஹாஜியுமான அல்ஹாஜ் மெளலவி முப்தீ கே. ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ வெளியிட்ட அறிக்கை:

அக்.7 மாலை திருச்சி அதன் சுற்றுப்புறங்கள் மற்ற மாவட்டங்களில் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை தென்பட்டதால் ஹிஜிரி 1443. அக் 8 ஆம் தேதி ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை ஆரம்பமாகிறது. மேலும் எதிா்வரும் அக்.19 ( செவ்வாய்க்கிழமை) மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும்.

முஸ்லிம்கள் அனைவரும் நபிகள்(ஸல்) காட்டிய சுன்னத்தான வழியைப் பின்பற்றி நடந்து இறைவனை அதிகமாகத் தொழுது நபிலான வணக்கங்கள், தான தா்மங்களில் ஈடுபட்டு உணவு அபிவிருத்திக்காகவும், ஆயுள் அதிகரிக்கவும், நம் சகோதர சமுதாய மக்களுடன் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ இறைவனிடம் பிராா்த்தனை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT