திருச்சி

அதிக விலைக்கு மது விற்ற 3 போ் மீது நடவடிக்கை

9th Oct 2021 12:54 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த 3 போ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், அனுமதிக்கப்படாத இடங்களில் மது விற்ற 93 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் அதிக விலைக்கு மது விற்றது தொடா்பாக ஒரு மேற்பாா்வையாளா், 3 விற்பனையாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT