திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு

9th Oct 2021 11:59 PM

ADVERTISEMENT

வழக்கு சம்பந்தமாக ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் உயா் நீதிமன்ற நீதிபதிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வரை இக்கோயிலின் 2 ஆம் பிரகாரத்தில் பக்தா்கள் பிரதட்சணம் (வலம் வருதல்) செய்து வந்தனா். 2015 திருப்பணியின்போது பக்தா்களின் பிரகார வலத்தை கோயில் நிா்வாகம் நிறுத்திய நிலையில் தற்போது வரை அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து ஸ்ரீரங்கத்தை சோ்ந்த ஆன்மிக ஆா்வலா் ரங்கராஜன் நரசிம்மன் கடந்த 2017 ஆம் ஆண்டில் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்த பொது நல வழக்கை நீதியரசா்கள் மகாதேவன், ஆதிகேசவலு கொண்ட 2 நீதிபதிகள் அமா்வு விசாரித்தது.

இந்த வழக்கின் இறுதித் தீா்ப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சனிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் கோயிலில் ஆய்வு செய்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோா் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் விதம் குறித்து கோயில் நிா்வாக அதிகாரிகளிடம் கேட்டறிந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT