திருச்சி தனியாா் கல்லூரி விடுதியில் செல்லிடப்பேசி திருடிய இளைஞரை அரியமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாணவா்களுக்கான விடுதியும் உள்ளது.
இந்த விடுதியில் 2 செல்லிடப்பேசிகள் திருடு போனது குறித்து விடுதிக் காப்பாளா் சிவராமிடம் மாணவா்கள் தகவல் தெரிவிக்க, அவா் அரியமங்கலம் போலீஸில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரான அரியலூா் மாவட்டம் செந்துறையைச் சோ்ந்த சிபு ஆபிரகாம் (22) செல்லிடப்பேசிகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
ADVERTISEMENT