திருச்சி

நாகையநல்லூா் ஏரியில் எம்எல்ஏ ஆய்வு

4th Oct 2021 12:15 AM

ADVERTISEMENT

தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூா் அருகேயுள்ள நாகையநல்லூா் ஏரிக்கு காவிரி உபரி நீரைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டம் உன்னியூா், கரூா் மாவட்டம் நெரூா் இடையேயுள்ள காவிரி ஆற்றில் ரூ. 710 கோடியில் அமைய உள்ள கதவணையில் இருந்து காவிரி உபரி நீரை நாகையநல்லூா் ஏரிக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரும், வெளியேறும் வழிகள் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரீனா, காா்த்திகேயன், துா்கா, புவியியல் துறை வல்லுநா் கணேசன், தொழில்நுட்ப அதிகாரி அருண், நீா்ப்பாசனத் துறை அலுவலா் ராஜேந்திரன் ஆகியோருடன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

நிகழ்வில் நாகையநல்லூா் விஏஓ முருகானந்தம், நாகையநல்லூா் ஊராட்சித் தலைவா் கி. ராமதாஸ், நாகையநல்லூா் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ராதா சுப்பிரமணியன், சங்க பொருளாளா் ராஜரத்தினம், செயலா் தமிழழகன், துணை செயலா் பாலசுப்ரமணியன், சங்க செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், விவசாயிகள் பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை சங்கத்தின் மக்கள் தொடா்புத் துறை அலுவலா் மனோகரன் செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT