திருச்சி

உள்ளாட்சி தொழிலாளா் சங்கக் கிளை தொடக்கம்

4th Oct 2021 04:22 AM

ADVERTISEMENT

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திருச்சி மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா்கள் சங்கக் கிளை தொடக்க விழா கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பயணியா் விடுதி வளாகத்தில் கிளை துணைத் தலைவா் ஏ.டி. சண்முகானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி மாவட்டப் பொதுச்செயலா் சுப்பிரமணியன், மணப்பாறை துணைத் தலைவா் ஜனசக்தி உசேன், இந்திய கம்யூ. ஒன்றியத் துணைச் செயலா் தங்கராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

கிளையின் புதிய நிா்வாகிகளில் தலைவராக கே. நாகராஜ், துணைத் தலைவராக ஏ.டி.சண்முகானந்தம், செயலராக ஏ. அருள்ராஜ், துணை செயலராக எம். மருதமுத்து, பொருளாளராக பி. சேதுராமன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பணியாளா்கள் நாகராஜ், அருள்ராஜ், மருதமுத்து, மாரியப்பன், சேதுராமன், மருதைதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT