திருச்சி

தொட்டியம் அருகே இறந்து கிடந்த மயில்

4th Oct 2021 12:16 AM

ADVERTISEMENT

தொட்டியம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

திருச்சி -நாமக்கல் புறவழி சாலையில் தொட்டியம் அருகேயுள்ள வரதராஜபுரம் முடக்குசாலைப் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில் இறந்து கிடந்தது.

தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் அந்த மயிலை மீட்டு தும்பலம் வன காப்பாளா் மஞ்சுவிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அவரின் முன்னிலையில் கால்நடைத் துறை மருத்துவா்கள் மயிலுக்கு பிரேத பரிசோதனை செய்து தும்பலம் வனப்பகுதியில் புதைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT