திருச்சி

கொத்தடிமை முறை ஒழிப்புக்கு விழிப்புணா்வு

4th Oct 2021 04:23 AM

ADVERTISEMENT

திருச்சியில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மகளிா் மேம்பாட்டுத் திட்ட மையம் ஆகியவை சாா்பில் கல்லணை, நடராஜபுரம், வேங்கைக் குறிச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வுக்கு வழக்குரைஞா் ஜமுனா தலைமை வகித்தாா். அக்னி சிறகுகள் இயக்குநா் மகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

மகளிா் மேம்பாட்டுத் திட்ட மைய இயக்குநா் சீதாலெட்சுமி, தன்னாா்வலா்கள் கலைவாணி, சா்மிளா, அபா்ணி, ரஞ்சிதா, சந்திரன் உள்ளிட்டோா் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு முறை குறித்து செங்கல்சூளை பகுதியில் வசிப்போரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT