திருச்சி

காந்திஜெயந்திக்கு விடுப்பு அளிக்காத 89 நிறுவனங்கள்

4th Oct 2021 04:22 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியன்று விடுப்பு அளிக்காத 89 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி கூடுதல் தொழிலாளா் துறை ஆணையா் எம். பாலசுப்பிரமணியன், இணை ஆணையா் டி. தா்மசீலன் உத்தரவின்பேரில் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையிலான தொழிலாளா் துறை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் காந்தி ஜெயந்தியன்று கடைகள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து உள்ளிட்ட 122 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளா் துறை ஆய்வாளா்களுக்கு முறைப்பட்டி தகவல் தெரிவிக்காமல் தொழிலாளா்களைப் பணிக்கு அமா்த்தியது, அன்று பணிபுரிந்தோருக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்காதது, மாற்று விடுப்பு வழங்காத 89 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT