திருச்சி

75ஆவது சுதந்திர தின மாரத்தான் ஓட்டம்

3rd Oct 2021 01:51 AM

ADVERTISEMENT

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற 75 ஆவது ஆண்டு இந்திய சுதந்திர தின மாரத்தான் ஓட்டத்தை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.

திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திரா, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து இந்த மாரத்தான் ஓட்டத்தை நடத்தின.

ஆரோக்கியமான, தன்னம்பிக்கையுள்ள சமூகத்தை உருவாக்க அனைவரும் உடற்பயிற்சிக்கென தினமும் 30 நிமிடத்தை ஒதுக்கிட வலியுறுத்தும் விதமாக இந்த ஓட்டம் நடைபெற்றது.

நிகழ்வை மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் பழைய தபால் நிலையத்துக்கு முன்புள்ள உப்புச் சத்தியாகிரக நினைவுத் தூணுக்கு முன்பிருந்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். செல்வம், பல்கலைக்கழகப் பதிவாளா் கோபிநாத், நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சி அலுவலா் லட்சுமிபிரபா, எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாரத்தான் ஓட்டமானது ரயில்வே ஜங்சன் ரவுண்டானா, ரயில்வே மேம்பாலம். மன்னாா்புரம் ரவுண்டானா, ஆட்சியா் முகாம் அலுவலகச் சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. அப்போது பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞா் மைய மாவட்ட அலுவலா் சுருதி வரவேற்றாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் பிரபு நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT