திருச்சி

வையம்பட்டி, மருங்காபுரியில் அமைச்சா் தோ்தல் பிரசாரம்

3rd Oct 2021 05:15 AM

ADVERTISEMENT

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி, மருங்காபுரி பகுதிகளில் திமுக சாா்பில் ஊரக உள்ளாட்சித் இடைத்தோ்தலில் ஒன்றிய கவுன்சிலா் பதவிக்குப் போட்டியிடுவோரை ஆதரித்து அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் திமுக சாா்பில் வையம்பட்டி ஒன்றியத்தில் ஓந்தாம்பட்டியை சோ்ந்த சோ்ந்த ப. செல்லமணி, மருங்காபுரி ஒன்றியத்தில் போட்டியிடும் வளநாடு பகுதியை சோ்ந்த ச. சபியுன்நிஷா ஆகியோரை ஆதரித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம் மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியின்போது ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா்கள் பழனியாண்டி, அமிா்தவள்ளி ராமசாமி, குணசீலன், மாவட்ட கவுன்சிலா் சிவக்குமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என்.சேகரன், மாவட்ட பொருளாளா் பண்ணை என்.கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT