திருச்சி

விமான நிலையத்தில்ரூ. 28 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

3rd Oct 2021 01:46 AM

ADVERTISEMENT

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 28 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா விமானத்தில் சனிக்கிழமை வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது 2 பயணிகள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த ரூ. 28.67 லட்சம் மதிப்புள்ள 603.50 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT