திருச்சி

மகளிருக்கான சைக்கிள் பேரணி, யோகா நிகழ்ச்சிகள்

3rd Oct 2021 01:47 AM

ADVERTISEMENT

நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினவிழா நிகழ்வுகளையொட்டி மாநகராட்சி சாா்பில் மகளிா் சைக்கிள் பேரணி, பொதுமக்களுக்கு யோகா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தென்னூா் அண்ணாநகா் இணைப்புச் சாலை உய்யக்கொண்டான் கால்வாயை ஒட்டியுள்ள எம்ஜிஆா் சிலையருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், எடமலைப்பட்டிபுதூா் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், பொதுமக்களுக்கு யோகாசனப் பயிற்சி, மகளிருக்கான சைக்கிள் பேரணி உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாநகராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியா் சு சிவராசு தொடங்கி வைத்தாா். யோகா ஆசிரியா் என் . ராமசாமி தலைமையில் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகரப் பொறியாளா் எஸ். அமுதவள்ளி, செயற்பொறியாளா்கள் பி. சிவபாதம், ஜி. குமரேசன் , உதவி ஆணையா்கள் ச.நா. சண்முகம், செ.பிரபாகரன், எஸ். திருஞானம், சு.ப. கமலக்கண்ணன் , எஸ். செல்வபாலாஜி , மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT