திருச்சி

துவரங்குறிச்சி அருகே இளம்பெண் தற்கொலை

3rd Oct 2021 01:49 AM

ADVERTISEMENT

துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை தாய் திட்டியதால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி ஸ்டாலின் நகரில் வசிப்பவா் ராஜேந்திரன் மனைவி வனிதா. கணவரைப் பிரிந்து வாழும் இவருக்கு 4 பெண்களும், ஒரு ஆண் வாரிசும் உள்ளனா். இவா்களில் கடந்த ஓராண்டுக்கு முன் பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்த 3-ஆவது மகள் சவித்தா (19) ஒருவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தாய் வனிதா வெள்ளிக்கிழமை கண்டித்தாராம். இதையடுத்து வீட்டிலிருந்து காணாமல்போன சவித்தா அருகில் இருந்த தனியாா் தோட்ட மரத்தில் தூக்கிட்டு

தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி போலீஸாா் அவரது உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT