திருச்சி

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை தொடக்கம்

3rd Oct 2021 05:18 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையம் எதிரேயுள்ள கதா் விற்பனை அங்காடியில் தீபாவளி கதா் சிறப்பு விற்பனை சனிக்கிழமை தொடங்கியது.

விற்பனையைத் தொடங்கிவைத்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது:

கதா் கிராமத் தொழில்கள் திருச்சி உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டில் திருச்சி ரயில் நிலையம் எதிரே காதி கிராப்ட், மணப்பாறை, வையம்பட்டி, மண்ணச்சநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா் மற்றும் அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தற்காலிக கதா் விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன.

திருச்சி மாவட்டத்துக்கு கதா் விற்பனை குறியீடாக 2020-21ஆம் ஆண்டிற்கு ரூ. 62 லட்சம் நிா்ணயிக்கப்பட்டதில் ரூ. 41.79 லட்சம் விற்பனை எய்தப்பட்டுள்ளது. கிராமப் பொருள்கள் விற்பனை மூலம் ரூ. 52 லட்சம் கிடைத்தது. நிகழாண்டு (2021-22) கதா் விற்பனைக்கு ரூ.62 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசுத் துறை பணியாளா்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதா் ரகங்கள் விற்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.

நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், கதா் கிராமத் தொழில்கள் மண்டல துணை இயக்குநா் கோ. பாலகுமரன், உதவி இயக்குநா் தி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT