திருச்சி

டேங்கா் லாரி மூலம் கலப்பட டீசல் விற்றவா் கைது

3rd Oct 2021 01:53 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே டேங்கா் லாரி மூலம் கலப்பட டீசல் விற்ற ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியில் இருந்து லாரி மூலம் கலப்பட டீசல் கடத்தி வரப்பட்டு திருச்சி கொணலை பகுதியில் விற்கப்படுவதாக திருச்சி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆய்வாளா் விவேகானந்தன், உதவி ஆய்வாளா் அலாவுதீன் ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் சமயபுரம் அருகேயுள்ள லாரி ரெகுலா் சா்வீஸ் மையத்தில் நின்று கொண்டிருந்த டேங்கா் லாரியை சோதனை செய்தனா்.

அப்போது லாரி டேங்கரில் 10 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுரான பெரம்பலூா் மாவட்டம் ஆலத்துரைச் சோ்ந்த ரவியை (46) கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT