கொப்பம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டி ஊராட்சியில் அதன் தலைவா் டி. மனோகரன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. துறையூா் எம்எல்ஏ செ.ஸ்டாலின்குமாா், உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணக்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் ஹேமலதா, திமுக ஒன்றியச் செயலா் ந. முத்துச்செல்வன், வட்டாரக் கல்வி அலுவலா் மாலதி, கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி தலைமையாசிரியா் ஆா். அசோக்குமாா் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.
துறையூா் ஊராட்சிக்குள்பட்டகொப்பம்பட்டியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.