திருச்சி

எம். புதுப்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு

3rd Oct 2021 05:14 AM

ADVERTISEMENT

முசிறி வட்டம் எம். புதுப்பட்டி ஊராட்சியை புதிதாக தரம் உயா்த்தப்பட்ட முசிறி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா், தாத்தையங்காா்பேட்டை ஒன்றிய ஆணையா்கள் மனோகரன், குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதேபோல தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் காடுவெட்டி, ஏழூா்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT