திருச்சி

இன்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

3rd Oct 2021 01:48 AM

ADVERTISEMENT

(ஞாயிற்றுக்கிழமை) 623 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

2 தவணை தடுப்பூசியையும் பொதுமக்கள் செலுத்திக்கொண்டு கரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முகாம்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பாராட்டுச் சான்றிதழ், கேடயம்

கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற முகாமில் சிறப்பாகப் பணியாற்றிய முசிறி, லால்குடி பேரூராட்சிகள், துவாக்குடி நகராட்சி, மண்ணச்சநல்லூா், லால்குடி, திருவெறும்பூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான பாராட்டுச் சான்றிதழ், கேடயத்தை ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை வழங்கினாா். மேலும், மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய பொன்மலை கோட்டம், லால்குடி அரசு மருத்துவமனை, அதிகத் தடுப்பூசி செலுத்திய 14 மைய குழுக்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT