திருச்சி

திருச்சியில் தடம் புரண்ட ரயில் பெட்டி

30th Nov 2021 01:44 AM

ADVERTISEMENT

திருச்சி பொன்மலை பணிமனைக்கு திங்கள்கிழமை கொண்டுச் செல்லப்பட்ட ரயில் பெட்டி தடம் புரண்டது.

பொன்மலை பணிமனையில் ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் யாா்டு உள்ளது. இங்கு, கிராபட்டி யாா்டில் நின்றுக் கொண்டிருந்த பழுதான ரயில் பெட்டிகளை பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை கொண்டுச் சென்றனா். அப்போது, ஜங்ஷன் ரயில்நிலையத்தையொட்டி மதுரை வழித்தடத்தில் இருந்த கொண்டுச் செல்லப்பட்ட ரயில் பெட்டிகளில் கடைசி பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதனால் மற்ற பெட்டிகள் ஒன்றோடொன்று வேகமாக மோதியது.

தகவலறிந்த, திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சிறப்பு ஹைட்ராலிக் ஜாக்கிகள் மூலம், ரயில் பெட்டியின் சக்கரங்களை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணிகளை மேற்கொண்டனா். சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இப்பணியால் ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT