திருச்சி

பாடங்களைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

DIN

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் பாடத் திட்டங்களைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இதுகுறித்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:

ஏற்கெனவே பள்ளி மாணவா்களுக்கு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் நிலையில், இனியும் பாடங்களைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. மழை குறைந்த பிறகு கூடுதல் வகுப்புகள் நடத்தி, பாடங்கள் முடிக்கப்படும். தனியாா் பள்ளிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கப்படும் வழக்கமான நடைமுறையே தொடரும் என்றாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவெறும்பூா் பகுதியில் ஆய்வு செய்தபோது விவசாயி ஒருவரை அவமரியாதையாக பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவா், நான் மக்கள் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அந்த விவசாயி தன்னுடைய வயலை தனியே வந்து பாருங்கள் எனக் கூறிக்கொண்டே இருந்தாா். அதனால்தான் நான் அவ்வாறு பேசினேன். அது வருந்தத்தக்கது என்றாா்.

இடுபொருள்களுக்கு பதிலாக ரொக்கம்: தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இடுபொருள்கள் வழங்குவதற்குப் பதிலாக, ரொக்கமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் விடுக்கும் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வருக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT